தமிழ் நாட்டு பெண்களுக்கே உரிய பேரழகையும் , இலக்கியமும் இலக்கணமும் வர்ணிக்க இயலாத அறிவுத்திறனும் பொருந்திய தெய்வீக பார்வையும் பார்த்தவுடன் வணங்கத்தக்க அளவிற்கு அடக்கமும் தன்னிடத்து கொண்ட ஒரு காவிய தலைவியை இங்கு சந்திப்போம்.
கருமையான டாபூர் ஆம்லா ஹேர் ஆயில் போட்டு மேன்டைன் செய்த கூந்தலையும் , காண அறியாத கானகத்திலே , கோடை காலத்தில் தண்ணீரின்றி சொங்கியாக ஓரமாக உறங்கிக்கொண்டிருக்கும் யானையின் தும்பிக்கை போல அழகிய பின்னல் , அதில் விலை உயர்ந்த தந்தம் போல் , மதுரையில் மட்டும் மலிவாகக் கிடைக்கும் , மட்டற்ற இடங்களில் ஒரு முழம் இருபது ரூபாய்க்கு கிடைக்கும் மணம் பொருந்திய மல்லிகை, இக்காலத்தில் ஹோடேலில் கிடைக்கும் , அக்வேரியமில் பாவமாக தத்தமது ஆளுடன் உல்லாசமாக நீந்துகொண்டிருக்கும் மீன்களை போன்ற கயல் விழிக்கண்கள் , ராமர் விட்ட அம்பு போன்று , தற்போது ஒரு படத்தில் , தலைவர் கமலா ஹாசன் த்ரிஷா விக்கு விட்ட அம்பு போன்று புருவங்கள், பெங்களுரு தக்காளிப்பழத்தை சலட்காக பீஸ் போட்டது போன்ற செந்நிற உதடுகள் , உடலுக்கு மிகவும் உன்னதமான டபுள் பீன்ஸ் பிளந்தது போன்ற அழகிய காதுகள் , அதில் ப்லாடினமால் செய்த , அதன் அன்டிக்கு டிசைனில் நட்சத்திரா வைரம் பொருந்திய குண்டலங்கள், மங்கள பொட்டு , மாலை நேரத்தில் ஏற்றும் சிறிய விளக்கு போன்ற மூக்கு , ஆயிரம் பூக்கள் காண முடியாத , இரநூறு சதவீதம் பெர்போமன்ஸ் அப்பரைசல் கிடத்தும் காண முடியாத புன்னகை , அவள் கண்களில் காதலின் விதை , இல்லாதது போல இடை , மெல்லிய பாந்தினி மற்றும் ஜர்தோசி வேலைபாடு கொண்ட தென்றலில் துவழும் துப்பட்டா , காவிரி ஆறு தமிழகம் எங்கும் பறந்து விரிந்து ஓடும் போல் , ஆர் எம் கே வி , போத்திஸ் , நல்லி இங்கெல்லாம் கிடைக்காத காஞ்சி பட்டு புடவை ,
மனதில் கனத்தையும்
கண்களில் கண்ணீரையும்
இதழில் தயக்கத்தையும்
இதயத்தில் காயத்தையும்
அறிவில் அறிவுரையும்
கொண்டவாறு பாதி மட்டுமே சார்ஜ் ஆகி இருக்கும் கைபேசியை பார்த்துக்கொண்டவாறு, கைபேசியில் ரூபாய் மூன்று மட்டும் பாலன்சாக கொண்டிருக்கும் அவள், தன் காதலனிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்தவாறு இங்கும் , அங்குமாய் இயற்பியல் லேபில் இருக்கும் எச்பெரிமென்ட் பெண்டுலம் போல் ஒச்சிலட் செய்து கொன்டிருந்தாள் ஆண்ட்ராஇடு புறத்து அரசி அரும்ததியார் .
No comments:
Post a Comment